கிரேட்டர் நொய்டாவில் தண்ணீர் நிரம்பிய குழியில் கார் விழுந்ததில் மென்பொறியாளர் பலியானார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 150 இல் கட்டுமானத்தில் உள்ள கட்டடத்தின் அடித்தளத்திற்காக தோண்டப்பட்ட 20 அடி ஆழ குழியில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 27 வயது மென்பொருள் பொறியாளர் பலியானதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தீயணைப்புத் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் காவல் துறை ஆகியவற்றின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது. பலியானவர் யுவராஜ் மேத்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் செக்டார் 150 இல் உள்ள டாடா யுரேகா பார்க் சொசைட்டியைச் சேர்ந்தவர். அவர் குருகிராமில் உள்ள புகழ்பெற்ற நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். சம்பவம் நடந்த நேரத்தில் பணியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் கூறினர். மூடுபனி மற்றும் அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் உடல் மீட்கப்பட்டது என்று கூடுதல் காவல் ஆணையர் (கிரேட்டர் நொய்டா) ஹேமந்த் தெரிவித்தார்.
இதனிடையே நொய்டா நிர்வாக அலட்சியத்தைக் குற்றம் சாட்டி உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.