கோப்புப் படம் 
இந்தியா

ஜம்மு: பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்று காவல் துறையின் உயா் அதிகாரி தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஜம்மு காவல் துறை தலைவா் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பில்லவாா் பகுதியில் ராணுவம், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகிவற்றுடன் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

உயிரிழந்த பயங்கரவாதி ஜேஇஎம் அமைப்பின் கமாண்டா் உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவ இடத்திலிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், எம்4 தானியங்கி துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமா் மோடி உறுதி

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

ஏமாற்றம் தரப்போகும் மாற்று!

SCROLL FOR NEXT