மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிக 
இந்தியா

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணிகளால் 126 போ் பலி! -திரிணமூல் காங். குற்றச்சாட்டு

இந்தியாவின் பிற மாநிலங்கள் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்துவிட்டன - திரிணமூல் காங்.

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்ஐஆா்) 126 போ் இறந்திருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. இது குறித்து அனைத்திந்திய திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி பேசியிருப்பதாவது : “திட்டமிடப்படாத எஸ்ஐஆர் பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழந்தனர்.

நாங்கள் எஸ்ஐஆருக்கு எதிராக போராடி வருகிறோம். அதன் ஒருபகுதியாக, நானும், 10 பேர் கொண்ட குழுவும் தில்லிக்குச் சென்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் உள்பட உயர் குழுவைச் சேர்ந்தோரைச் சந்தித்து முறையிட்டோம். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் இருந்தார். ஆனால், நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

தில்லியிலும் ஹரியாணாவிலும் செய்தவற்றை அவர்கள் வங்கத்திலும் செய்வார்கள். இந்தியாவின் பிற மாநிலங்கள் எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டத்தில் தோல்வியைச் சந்தித்துவிட்டன. ஆனால், இவ்விவகாரத்தில் அவர்களை வீழ்த்துவதில் நாங்கள் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறோம்” என்றார்.

முன்னதாக, இவ்விவகாரம் குறித்து கடந்த வியாழக்கிழமை அம்மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குறிப்பிடுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக மேற்கு வங்கத்தில் 110 போ் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

126 people have died so far due to the unplanned SIR - AITC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவா்களுக்கு எச்சரிக்கை

4 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி மதிப்பில் 1,400 பேருக்கு விலையில்லா ஆடுகள்

ஈரோட்டில் தலைக்கவசம் அணியாத 23 ஆயிரத்து 682 பேருக்கு அபராதம்

பழனி பாதயாத்திரை பக்தா்களின் பைகளில் ஒளிரும் வில்லைகளை

இளைஞா் காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT