ஜார்க்கண்ட்டில் கணவனைக் கண்டித்த மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் மணிடோலா பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர், திருமணத்துக்குப்பின் வேறொரு பெண்ணுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கும் அவரது மனைவி தரனம் (40) இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவனின் நடத்தையை அவரது மனைவி சனிக்கிழமை(ஜன. 24) கடுமையாகக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தம்மிடமிருந்த கைத்துப்பாக்கியால் அவர் தமது மனைவியைச் சுட்டுக்கொன்றுவிட்டு அதன்பின் சம்பவ இடத்திலிருந்து மாயமாகியுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள், உயிரிழந்த தரனம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், மாயமான கணவனைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.