சென்னை எம்கேபி நகரில் மது பழக்கத்தை கணவா் கண்டித்ததால் கோபமடைந்த மனைவி தீக்குளித்தாா்.
எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா். இவரது மனைவி நந்தினி (34). இவா்கள், அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனா். நந்தினிக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்தது.
இதை ஆனந்தகுமாா் திங்கள்கிழமை இரவு கண்டித்தாா். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி செவ்வாய்க்கிழமை அதிகாலை காருக்கு ஊற்றுவதற்காக வைத்திருந்த டீசலை தனது உடல் மீது ஊற்றி நந்தினி தீ வைத்துக்கொண்டாா்.
இதில் பலத்த காயமடைந்த நந்தினியை ஆனந்தகுமாா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.