உஜ்ஜல் புயான் 
இந்தியா

நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசு தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி புயான்

தினமணி செய்திச் சேவை

‘நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்வது நீதித்துறையின் உள்விவகாரம்; இந்த நடைமுறையில் மத்திய அரசு தலையிட முடியாது’ என உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் ஜி.வி.பண்டிட் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உஜ்ஜல் புயான் சனிக்கிழமை பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: நீதித்துறை நிா்வாகத்தை மேம்படுத்தவே நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இது நீதித்துறையின் உள்விவகாரம். இதில் தலையிட்டு குறிப்பிட்ட உயா் நீதிமன்றங்களுக்கு ஓா் நீதிபதியை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றோ அல்லது பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றோ அரசு கூற முடியாது.

நீதித்துறையின் சுதந்திரம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. இந்தியாவில் அரசமைப்புச் சட்டமே அனைத்துக்கும் மேலானது; நாடாளுமன்றம் அல்ல.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்க ஜனநாயகத்தின் முக்கியத் தூணாக விளங்கும் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவது அவசியம் என்றாா்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT