பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நவீன்(45) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஜன. 20 பதவியேற்றார். இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்றபின் அவர் மேற்கு வங்கத்துக்கு முதல்முறையாகச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
இரண்டு நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை(ஜன. 27) மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்ட ஆண்டால் விமான நிலையத்தில் சென்றிறங்கிய நிதின் நவீனுக்கு அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். மேற்கு வங்கத்தில் நிகழாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதின் நவீனின் இந்தப் பயணம் அம்மாநில பாஜகவினருக்கு உத்வேகமளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.