பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில் உள்ள உணவக அறையில் பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜக்கன்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ரிதுராஜ் குமார் சிங் கூறுகையில்,
இறந்தவர் அஜய் குமார் சர்மா (76) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சர்மா ஜனவரி 18 முதல் பாட்னாவில் உள்ள உணவகத்தில் அறையெடுத்து தங்கியிருந்தார்.
கடந்த 2 நாள்களாக அறை திறக்கப்படாத நிலையில், திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு உணவக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த கதவைத் தட்டியுள்ளனர், கதவைத் திறக்காத நிலையில், அவர் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து உணவக ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். பாதுகாப்புப் பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் படுக்கையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
தடயவியல் நிபுணர்கள் உணவக அறையிலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர், மேலும் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
உடலில் எந்த வெளிக்காயங்களும் காணப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினார். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னரே சர்மாவின் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் நிலைய ஆய்வாளர் மேலும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.