விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற தனி விமானம் புணே மாவட்டத்தின் பாராமதியில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் உள்ளிட்டோர் விமான விபத்தில் பலியான செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
இந்தத் துயரத்தின் வீரியத்தை உள்வாங்கிக்கொள்வது கடினம். சரத் பவார், சுப்பிரியா சுலே மற்றும் விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.