மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மரணம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம்செய்த சிறிய ரக விமானம், புதன்கிழமை காலை விபத்துக்குள்ளாகி, அவருடன் சேர்த்து 5 பலியாகினர். இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து மற்றும் சம்பவ விதிகளின்படி, விசாரணை வெளிப்படையாகவும் காலக்கெடுவுக்குள்ளும் நடத்தப்படும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளது. மேலும், விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், அதன் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த விசாரணைக்கு மகாராஷ்டிர மாநில அரசின் ஒத்துழைப்பும், உள்ளூர் நிர்வாகத்தின் உதவியும் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.