அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்  PTI
இந்தியா

அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம்! சாலைகளில் மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் நடைபெறும் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று மலர்தூவி அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் புதன்கிழமை காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், அஜீத் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலேயே இன்று காலை 11 மணியளவில் அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

வித்யா பிரதிஸ்தான் திடலில் நடைபெறவுள்ள இறுதிச் சடங்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், பாராமதியில் உள்ள அஜீத் பவாரின் வீட்டில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றது.

வழிநெடுங்கிலும் சாலையில் இருபுறங்களிலும் குவிந்துள்ள மக்கள் அஜீத் பவாருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்து வருகிறார்கள்.

Ajit Pawar's funeral procession! People bid farewell by showering flowers on the roads!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

விமான விபத்துகளில் உயிரிழந்த தலைவர்கள்: அஜீத் பவார் வரை... | Ajit Pawar | Flight Crash | NCP |

டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

SCROLL FOR NEXT