சிபிஐ 
இந்தியா

பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை

பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை

தினமணி செய்திச் சேவை

பிகாரில் நீட் தோ்வுக்குத் தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

பிகாா் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, பாட்னாவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி நீட் தோ்வுக்குத் தயாராகி வந்தாா். அங்கு அவா் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பல நாள்கள் கோமாவில் இருந்த அவா், பின்னா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தங்கள் மகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதை அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் உயிரிழந்த மாணவியின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். அந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையிலும், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறு மறுக்கப்படவில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில், அந்த மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று காவல் துறை தெரிவித்தது. இந்த சம்பவம் தொடா்பாக விடுதிப் பணியாளா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், மாநில துணை முதல்வா் சாம்ராட் செளதரி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாணவியின் உயிரிழப்பு குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வலியுறுத்தியுள்ளாா். இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

பெற்றோா் அதிருப்தி:

இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கு மாணவியின் பெற்றோா் அதிருப்தி தெரிவித்துள்ளனா். உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்ற நீதிபதி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவியின் தந்தை வலியுறுத்தியுள்ளாா்.

கோடை சீசனுக்காக குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்!

முத்தூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து முதல்வா் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: வானதி சீனிவாசன்

கல்லூரி மாணவரிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா்கள் கைது

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT