காஜியாபாத் உணவகத்தில் உணவு ஆர்டர் தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் உள்ள உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு வாடிக்கையாளர்கள் குழுக்கள் வந்துள்ளனர்.
அப்போது உணவகத்தில் உணவு ஆர்டர் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
உணவகத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மூன்று இளைஞர்களை போலீஸார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்களில் இருவர் வரும் வழியிலேயே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.