முகப்பு
இந்தியா

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை இயக்கம்

Updated On : 3 மார்ச், 2026 at 3:30 AM
இண்டிகோ சிறப்பு விமானங்கள் இயக்கம் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 11:40 PM

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) இயக்கப்படவுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

Updated On : 3 மார்ச், 2026 at 2:34 AM

இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதிமுதல் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணி தொடங்கப்படுகிறது.

Advertisement

முதல்கட்டமாக 10 இண்டிகோ சிறப்பு விமானங்கள் ஜெட்டாவில் இருந்து இயக்கப்படுகின்றன. ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம்-இண்டிகோ நிறுவனம் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளும்.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிடம் கள நிலவரத்தை மத்திய அரசு கேட்டறிந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.