கர்நாடகத்தில் 44 மயில்கள் உயிரிழப்பு! எச்5என்1 வைரஸ் தொற்று உறுதி!
பறவைக் காய்ச்சலால் கர்நாடகத்தில் 44 மயில்கள் உயிரிழந்தது தொடர்பாக...
கர்நாடக மாநிலம், தும்கூர் நகரத்தில் பறவைக் காய்ச்சலால் 44 மயில்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மே 1) தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதன்முதலில் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் தும்கூர் நகரத்தில் 44 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவர்கள் கூறினர்.
வனத்துறையின் தகவலின்படி, பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டதில், எச்5என்1 வைரஸ் தொற்றுதான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
Advertisement
இதனிடையே, நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் தும்கூர் நகரத்தில் எந்தப் பகுதியிலும் புதிய உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.