பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!
தில்லியில் சிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...
பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து தில்லியில் சிஎன்ஜி விலையும் வெள்ளிக்கிழமை காலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு, மேற்காசிய போரின் தாக்கம் எதிரொலியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் சவால், உலகளாவிய கச்சா எண்ணெய் கடும் விலையேற்றம் மற்றும் பிற காரணிகளால் நாடெங்கிலும் பல மாதங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலையேற்றம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 103.67-ஆகவும், டீசல் ரூ. ரூ. 95.25-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தில்லியில் சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 77.09 -க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிஎன்ஜி, ரூ. 79.09 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் மகாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனம் வியாழக்கிழமை சிஎன்ஜி எரிவாயு விலையை ரூ. 2 உயர்த்திய நிலையில், இன்று தில்லியில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் சிஎன்ஜி எரிவாயு விலை ஏற்றம் அடுத்தடுத்து விரிவுப்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
Following petrol and diesel, CNG prices also rise!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.