திருமணம் செய்து கொள்ள வேண்டாம்! மரணமடைந்த நொய்டா பெண் கடைசி மெசேஜ்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என மரணம் அடைந்த நொய்டா பெண் தோழிக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் பரபரப்பை ஏற்படுத்தியது.
நொய்டாவைச் சேர்ந்த திவிஷா ஷர்மா என்ற பெண் போபாலைச் சேர்ந்த வழக்குரைஞரைத் திருமணம் செய்து 2 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சந்தேகமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
வழக்குரைஞர்கள், நீதிபதிகளைக் கொண்ட குடும்பத்தில் திருமணமாகிச் சென்ற பெண் தூக்கிட்ட நிலையில் மே 12ஆம் தேதி இறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது கொலைதான் என பெண்ணின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன், நீங்களும் என்னைப் போல மாட்டிக்கொள்ள வேண்டாம், என்னால் அதிகம் பேச முடியாது, சரியான நேரம் வரும்போது நானே அழைக்கிறேன் என்று திவிஷா ஷர்மா என்ற பெண் தன்னுடைய தோழிக்கு அனுப்பிய கடைசி தகவலில் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement