முகப்பு
இந்தியா

எட்டு மாதக் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றிய தாய்!

ராஜஸ்தானில் 8 மாதக் குழந்தையின் வாயில் பெற்ற தாயே ஆசிட் ஊற்றிய நிலையில் குழந்தை உயிருக்குப் போராடி வருகின்றது.

குழந்தை - கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தானில் 8 மாதக் குழந்தையின் வாயில் பெற்ற தாயே ஆசிட் ஊற்றிய நிலையில் குழந்தை உயிருக்குப் போராடி வருகின்றது.

ராஜஸ்தானில் உள்ள பிவாதி பகுதியைச் சேர்ந்தவர் மோஹித். இவர் தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

நேற்று (மே 18) அவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் குழந்தையுடன் தனியே இருந்த அவரது மனைவி, வற்புறுத்தி குழந்தையின் வாயில் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

இதனால் குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்துள்ளது. இதனைக் கண்ட உறவினர்கள் சிலர் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். குழந்தை தற்போது மருத்துவமனை செயற்கை சுவாசக் கருவியுடன் உயிருக்குப் போராடி வரும் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் காவல்துறை துணை ஆய்வாளர் விசாரணை நடத்த மருத்துவமனைக்குச் சென்றார். அவரிடம் பேசிய குழந்தையின் தந்தை, தனது மனைவி வேண்டுமென்றே குழந்தையின் வாயில் ஆசிட்டை ஊற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

summary

Mother Pours Acid into Eight-Month-Old Baby's Mouth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.