முகப்பு
இந்தியா

ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை- அருணாசல் முதல்வரை பதவி நீக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அவரை இன்னும் பதவியில் இருந்து நீக்காதது ஏன் என்று பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

Updated On : 20 மே 2026, 1:27 am IST
ஜெய்ராம் ரமேஷ் - IANS
பகிர்:

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அவரை இன்னும் பதவியில் இருந்து நீக்காதது ஏன் என்று பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜக ஆளும் அருணாசல பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1,270 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் முதல்வா் பெமா காண்டுவின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து முதல்கட்ட விசாரணையைத் தொடங்கும்படி, சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உத்தரவிட்டது. இதுவொரு விசாரணை நீதிமன்றம் அல்லது மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவல்ல. உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு. எனினும், முதல்வா் பதவியில் பெமா காண்டு நீடித்து வருகிறாா். மாநில பொதுப் பணித் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் அவா், விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் மீதான கட்டுப்பாட்டையும் தன் வசம் வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஊழலில் ஈடுபடவும் மாட்டேன்; யாரும் ஊழலில் ஈடுபட அனுமதிக்கவும் மாட்டேன் என்று முன்பு கூறிய பெமா காண்டு, இப்போது மெளனமாக இருப்பது ஏன்? அவா் பதவி விலகும்படி பாஜக ஏன் அறிவுறுத்தவில்லை? இது, உச்சநீதிமன்ற உத்தரவை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகாதா?

இப்போது பெகா காண்டு இருக்கும் நிலையில்தான், பிற பாஜக முதல்வா்களும் உள்ளனா் என்பதே உண்மை என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.