முகப்பு
இந்தியா

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது பற்றி..

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி - x
பகிர்:

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தன்னுடைய இன்ஸ்டா மற்றும் கட்சியின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த நையாண்டி கட்சியின் பிரசாரம் நேற்று வைரலாகி லட்சக்கணக்கானோரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், இணையதளமே ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரிய அளவில் இந்த ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய பல்வேறு சமூக வலைத்தளங்களும் இதன் மூலம் முடக்கப்பட்டிருப்பதாகவும் தீப்கே குற்றம்சாட்டியிருக்கிறார்.

Advertisement

Advertisement

தீப்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பக்கம் முடக்கப்பட்டது, இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டர் கணக்கும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் இருந்த மற்றொரு கணக்கும் முடக்கிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Cockroach Peoples Party website, Instagram pages hacked

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.