ரெடி.. ஸ்டெடி.. கோ..

18. நெளி முதுகு என்றால் என்ன?

டாக்டர் விஸ்வநாதன்

'Scoliosis' என்பது உங்கள் முதுகுத்தண்டில் ஏற்படும் வளைவு ஆகும். அதாவது உங்கள் முதுகுத்தண்டில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விதமாக வளைந்திருக்கும். உதாரணமாக, உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் குழிவாகவும் (Concave) நடுமுகில் உள்ள முதுகெலும்புகள் வெளிப்புறமாக வளைந்தும் உள்ளது. இவைகள் சாதாரணமான வளைவுகள் கொண்ட முதுகெலும்புகள். இந்த முதுகெலும்புகள் வெவ்வேறு காரணங்களுக்காக அதிகம் வளைந்து (Excessive Curvature) போகின்றன. அதேபோல் ‘Scoliosis’ என்பது உங்கள் நடுமுதுகில் ஏற்படும் ஒன்று. அதாவது, உங்கள் நடுமுதுகிலுள்ள முதுகு எலும்புகள் ஒரு பக்கமாக வளைந்து போகும். இது வலது அல்லது இடது என எந்த பக்கமாக வேண்டுமானாலும் வளையலாம். ஆனால், இதனால் என்ன பிரச்னை என்றால், மீதமுள்ள உடல் பாகங்களில் ஏற்றத்தாழ்வு (Imbalance) ஏற்பட்டு ஒருவரின் நடை, நிற்கும், உட்காரும் Posture மாறும். இதனால் முதுகு, கால், கழுத்து போன்ற இடங்களில் மிக அதிகமாக வலிகள் ஏற்படும். அதேபோல் உங்களில் மொத்த உயரமும் பாதிக்கப்படும். உதாரணமாக, உங்கள் நடுமுதுகில் ஒரு பக்கமாக கூன் (Hump) விழும்.

இதனால் ஒரு பக்க கால் நீளமாகவும், இன்னொரு பக்க கால் குட்டையாகவும் மாறும். இதனால் உங்கள் நடையிலும் மாற்றம் ஏற்படும். அதேபோல் நீங்கள் உட்காரும்போதும், ஒரு பக்க இடுப்பு (Hip), இன்னொரு பக்கத்தை விட உயரம் குறைவாக இருப்பதால், உங்களால் நேராக உட்காருதல் கடினமாகும். மேலும் இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலியும், மரத்துப்போதலும் ஏற்படும். அதேபோல், உங்கள் முதுகுத்தண்டு ஒரு பக்கமாக வளைந்திருப்பதால், உங்களின் விலா எலும்புகளின் (Ribs) இயக்கம் குறைந்து மூச்சுவிடுதலும் சிரமமாகும்.

இந்தியாவில் கிட்டத்தட்ட '1 கோடி' மக்கள் ‘Scoliosis’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இப்போது ‘Scoliosis’ வகைகள் என்னென்ன, அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் இதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

Scoliosis வகைகள்:

➜ Structural Scoliosis (கட்டமைப்பு Scoliosis)

➜ Functional Scoliosis (செயல்பாட்டு Scoliosis)

கட்டமைப்பு Scoliosis (Structural Scoliosis)

இவ்வகையான ‘Scoliosis’ உடையவர்கள் பிறக்கும்போதே அவர்களின் முதுகெலும்பின் கட்டமைப்பு வளைந்து இருக்கும். அதாவது இவர்களின் முதுகெலும்பு பிறக்கும்போதே ஒருபக்கமாக வளைந்து இருக்கும். நான் மேலே கூறியதைப்போல, இந்தியாவில் கிட்டத்தட்ட '1 கோடி' பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனால் மேலே கூறிய ஏற்றதாழ்வுகளும் (Imbalance) போகப் போக ஏற்படும். இப்போது இதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சிகிச்சை முறை:

‘Structural Scoliosis’-க்கான சிகிச்சை முறை அறுவை சிகிச்சையே. இம்முறையில் உங்கள் முதுகெலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் நேர்படுத்த வேண்டும். அதேபோல், அறுவை சிகிச்சை முடிந்ததும் ‘Spine Brace’ என்பதை அணிய வேண்டும். இது உங்கள் முதுகெலும்பை நேராக்க உதவும்.

அதேபோல், மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகளில் ஒன்றான Manual Therapy, Dry Needling போன்றவை உங்கள் உடலில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை (Imbalance) சரி செய்ய உதவும். இவற்றுடன் ‘உடற்பயிற்சி’ செய்தால் நீங்கள் முழுமையாக குணமடையலாம்.

செயல்பாட்டு Scoliosis (Functional Scoliosis)

இவ்வகையான ‘Scoliosis’ நீண்ட நேரம் உட்காருவதாலும், Sedentary வாழ்க்கை முறையை பின்பற்றுவதாலும் ஏற்படுகிறது. இது தற்காலிகமான ஒன்றுதான். இவ்வகையான ‘Scoliosis’ மேம்பட்ட பிசியோதெரபி சிகிச்சைகளின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். ஆனால் இவ்வகை ‘Scoliosis’ ஒரு முறை வந்துவிட்டால் திரும்பவும் வர வாய்ப்புகள் அதிகம். எனவே நீங்கள் உடற்பயிற்சி, Manual Therapy போன்றவற்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வகை ‘Scoliosis’ ம், ‘Structural Scoliosis’ போல பிரச்னைகளைத் தரும். எனவே ‘Active’ வாழ்க்கைமுறையை வாழ்வோம், இவ்வகையான இடர்பாடுகளைத் தவிர்ப்போம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT