நகைச்சுவை 
குழந்தைகள் உலகம்

சிரித்து வாழ வேண்டும்.. சிரிக்க சில நகைச்சுவை!

சிரிக்க சில நகைச்சுவைகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.

இணையதளச் செய்திப் பிரிவு

'பஸ்சில் உன் பக்கத்தில் உட்கார்ந்து வந்தவருக்கு செல்போனில் சார்ஜ் இல்லைன்னு எதைவச்சு சொல்றே?'

'என்கூட தொண தொணன்னு பேசிக்கிட்டே வந்தாரே!'

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

****

'அவர் கைதட்டி அழைத்தால் ஏன் திரும்பிப் பார்க்காமப் போறே?'

'கொடுத்த கடனைக் கேட்டுத் தொலைப்பான்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

****

'மணமக்களை வாழ்த்தியவர் கேட்ரிங்காரர்னு எப்படிச் சொல்றே?'

'அடையும் அவியலும் போல வாழ்கன்னு வாழ்த்தினாரே!'

- ஏ. நாகராஜன், பம்மல்.

****

'கீரை விற்பவருடன் என்ன பிரச்னை?'

'அரைக்கீரை பத்து ரூபாய்னு சொன்னாரு... அப்ப முழு கீரை எவ்வளவுன்னு கேட்டேன்... கோபப்படுறாரு!'

-அ. தெய்வசிகாமணி, காஞ்சிபுரம்.

****

'தேர்தல்ல சீட் கேட்கறீங்களே... எவ்வளவு செலவு பண்ணுவீங்க?'

'நீங்க எவ்வளவு கொடுத்தாலும் செலவு பண்ணுவேன், தலைவரே!'

-தீபிகா சாரதி, சென்னை 5

****

'அரசர் நடுநடுங்கிக் கொண்டே போறாரே, போருக்கா?'

'இல்லை... அரசி கூப்பிட்டார் என்று அந்தப்புரத்துக்கு!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.

****

'ஏங்க, நமக்குத்தான் மேரேஜ் ஆயிடுச்சே... இன்னும் ஏன் படகு மறைவுலேயே உக்காரணும்?'

'கடன் பாக்கிக்காக என்னைத் தேடுற சுண்டல்

காரன் கண்ல படாம இருக்கத்தான்!'

-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.

****

'நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணலாமா?'

'எங்க அம்மா என்னை நம்பி நிறைய இடத்துல மொய் செஞ்சு வச்சிருக்காங்க... அதான் யோசனையா இருக்கு!'

****

'பிளாட் விற்பனையில் நீள, அகலம் குறிப்பிட்டது சரி... அது எதுக்கு உயரம் எனக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்?'

'மழை பெய்தால் தண்ணீர் எவ்வளவு உயரம் வரை தேங்கி நிற்கும் என்பதைக் காட்டுவதற்காக!'

****

'குழந்தையும் வருமான வரித்துறையும் ஒன்றுதான்!'

'எப்படிச் சொல்றீங்க?'

'இரண்டு பேரும் நம்மிடம் முதலில் மொபைலைத்தான் கேட்பாங்க!'

****

'எதிர்த்த வீட்டுக்காரி, 'உங்களுக்குச் சபலப் புத்தி'ன்னு சொன்னா..!'

'பார்த்தியா... நீ எனக்குப் புத்தியே இல்லைன்னு சொன்னீயே?'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

'என்ன சொல்லி கடன் கேட்டே... அவர் இல்லைன்னு சொன்னாரு?'

'நான் வெளியே கொடுத்திருக்கிற கடன் திரும்பி வந்ததும்... உங்க கடனை அடைச்சிடறேன்னு சொன்னேன்!'

****

'பதுங்குக் குழிக்கு நெட்டிசன்கள் புதுப் பெயர் வைத்திருக்கிறார்கள், மன்னா!'

'என்ன பெயர்?'

'உயிர் காக்கும் உன்னத குகை!'

****

'இது, இடிச்ச காயம் இல்ல... பொண்டாட்டி அடிச்ச காயம்னு டாக்டர் எப்படி கரெக்டா கண்டு

பிடிச்சார்?'

'காயத்தோட தீவிரத்தை வச்சுதான்!'

****

'சிலைக்கடத்தல் ஆசாமியை எல்லா வழியிலும் விசாரிச்சுப் பார்த்தாச்சு, சார்!'

'என்ன சொல்றான்?'

'அடிச்சாக்கூட வாயைத் திறக்காம சிலை மாதிரி நிக்கறான், சார்!'

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? TTV தினகரன் விளக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 24.12.25

பிரியங்காவுக்குள் ஒரு இந்திரா காந்தியை மக்கள் பார்க்கின்றனர்: ராபர்ட் வதேரா

ரூ.180 கோடி மதிப்பிலான ஆர்டரை வென்ற ஓஸ்வால் பம்ப்ஸ்!

SCROLL FOR NEXT