இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் வெள்ளம்
கொழும்பு, ஜன.9- இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு முதல் இன்று காலை வரை மட்டக்களப்பு பகுதியில் மட்
தற்போதைய செய்திகள்இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் வெள்ளம்
கொழும்பு, ஜன.9- இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு முதல் இன்று காலை வரை மட்டக்களப்பு பகுதியில் மட்
கொழும்பு, ஜன.9- இலங்கை கிழக்கு மாகாணத்தில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவு முதல் இன்று காலை வரை மட்டக்களப்பு பகுதியில் மட்டும் 312 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக இலங்கை வானிலை கணிப்பு மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திரிகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, செங்கலடி, வாகரை, வவுணத்தீவு, களுவாஞ்சிகுடி, புதிய காத்தான்குடி ஆகிய இடங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பாண்டிருப்பு தமிழ் பள்ளியில் மட்டும் சுமார் 1000 குடும்பங்கள் தங்கியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.