முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் ஏடிஎம் மையத்தை உடைத்து தீவைத்தவர் கைது

சென்னை, ஜன.9: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைத்து, தீவைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

சென்னை, ஜன.9: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைத்து, தீவைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று அங்கிருந்த ஏடிஎம் மெஷினை உடைத்துள்ளார். அம்மையத்தில் இருந்த ரசீதுகளையும் தீவைத்துக் கொளுத்தியிருந்தார்.

கனரா வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான தனிப்படையினர் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.

ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த புகைப்பட பதிவுகளை பார்த்தபோது திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த வரதராஜன் இந்த குற்றத்தைச் செய்திருப்பது தெரியவந்தது. அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

சம்பவம் நடந்த 2 தினங்களில் குற்றவாளியைக் கைதுசெய்த திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் தமிழ்ச்செல்வன், சட்டம், ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் பாண்டியன் உள்ளிட்டோரை சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டியதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →