மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்
நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு (மேற்கு), சாயக்காரன் தோப்பு, பகுதியைச் சேர்ந்தவர் டி.குமார்(வயது 27). டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரின் மனைவி தாமரைச் செல்வி (வய
நாகப்பட்டினம், நவ.15: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வாய்மேடு (மேற்கு), சாயக்காரன் தோப்பு, பகுதியைச் சேர்ந்தவர் டி.குமார்(வயது 27). டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்கிறார். இவரின் மனைவி தாமரைச் செல்வி (வயது 24) எட்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து மணம் புரிந்த இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் இன்று அதிகாலையும் தொடரவே, கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார் குமார். பின்னர், தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சில நிமிடங்களில் வீட்டுக்கு வெளியே நின்று வாந்தி எடுத்தவரை அக்கம்பக்கம் இருந்தவர்கள் விசாரித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வாய்மேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.