ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
ஸ்ரீபெரும்புதூர், நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில்
ஸ்ரீபெரும்புதூர், நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில் எட்டாம் ஆண்டு பிரம்மோற்ஸவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. எட்டாம் நாளான இன்று திங்கள்கிழமை ஐயப்பனுக்கு அருகில் உள்ள இளநீர் குளத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ஆயிரம் பேருக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை குருசாமி பாலசுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க இறைப்பணி மன்றத்தினர் செய்தனர்.