முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு அருகே இரவுக் காவலாளி மர்ம மரணம்

ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:14 PM
பகிர்:

ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் இரு தினங்களுக்கு முன், 24ம் தேதி இரவு வேலைக்குச் சென்றார். அதன்பின் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இந்நிலையில் அவர் வேலை பார்த்த  தோட்டத்துக்கு அருகே பாலத்துக்கு அடியில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →