தற்போதைய செய்திகள்

ஜான் பாண்டியன் காவலில் இருந்து விடுவிப்பு

திருநெல்வேலி, செப்.13: தூத்துக்குடி அருகே வல்லநாடு துப்பாக்கி சுடும் பயிற்சி  மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று காலை 6.30 மணி அளவில

தருண் விஜய்

திருநெல்வேலி, செப்.13: தூத்துக்குடி அருகே வல்லநாடு துப்பாக்கி சுடும் பயிற்சி  மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றத் தலைவர் ஜான் பாண்டியன் இன்று காலை 6.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் திருநெல்வேலிக்குத் திரும்பினார்.

முன்னதாக, பரமக்குடியில் இமானுவல் சேகரன் நினைவு நாளை ஒட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் பரமக்குடி செல்ல முயன்றார். ஆனால், பரமக்குடியில் பள்ளி மாணவன் ஒருவன் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக, அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. வெளி நபர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் பரமக்குடி பகுதியில் வர தடை இருந்த காரணத்தால், அவரை அங்கே செல்ல வேண்டாம் என போலீஸார் கூறினர். அவர் மறுக்கவே போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, வல்லநாடு துப்பாக்கிச் சுடும் தளத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT