சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி,ஏப்.12: கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த சிற
தற்போதைய செய்திகள்சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
கும்மிடிப்பூண்டி,ஏப்.12: கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த சிற
கும்மிடிப்பூண்டி,ஏப்.12: கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னம்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவரம்பேடு என்று அழைக்கப்படும் சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. குசநாபர் என்ற முனிவரால் ஆராதிக்கப்பட்டு, லவ-குசராலும், வால்மீகி முனிவராலும் போற்றி வணங்கப்பட்ட பெருமைக்குரிய இந்த ஆலயத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மற்றும் சுற்றுச் சந்நிதிகள் விமான நூதன ராஜ கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவாராதனம், பகவதனுக்ஞை, புண்யாஹம், ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. புதன்கிழமை கலசஸ்நபனம், மகாசாந்தி கும்பதிருமஞ்சனம் உட்பட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை யாத்ரா தானம் நிகழ்வும், கும்ப புறப்பாடு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக நிகழ்வும் நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள் பிரபாகரன், சபரி, நடராஜன் ஆகியோர் பொன்னேரி எம்.எல்.ஏ பொன்.ராஜா முன்னிலையில் ஆலயத்தின் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு ஸ்ரீ பெருமாள் நாச்சியார் திருக்கல்யாணமும், தொடர்ந்து திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அலுவலர் து.வள்ளுவன், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் முன்னின்று நடத்தினார்கள். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவிலுக்கு வந்து வரதராஜப் பெருமானை தரிசித்தனர்.