விருதுநகரில் பஸ்-வேன் மோதல்: 3 பேர் பலி
விருதுநகர்: விருதுநகர் புறவழிச் சாலையில் பஸ்ஸுடன் வேன் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த 12 பேர் சென்னையில் உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்
விருதுநகர்: விருதுநகர் புறவழிச் சாலையில் பஸ்ஸுடன் வேன் ஒன்று மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியைச் சேர்ந்த 12 பேர் சென்னையில் உறவினர் ஒருவரின் நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டு, ஏஸ் வேனில் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வேன் விருதுநகரில், மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே வந்தது. அப்போது, மதுரையில் இருந்து நெல்லை செல்லும் அரசுப் பேருந்து பயணிகளை சாலையோரம் இறக்கிவிட்டபடி நின்றது. அதனருகே வந்தபோது வேனின் டயர் திடீரென வெடித்ததில் வேன் நிலை தடுமாறி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது. இதி, வேனில் பயணித்த வெங்கடேசன்(35), முத்துலிங்கம்(65), சரஸ்வதி(55) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.