முகப்பு
தற்போதைய செய்திகள்

சேலம் : ஆசிரியை மற்றும் சப் இன்ஸ்பெக்டரிடம் செயின் பறிப்பு

சேலம், ஆக., 14  : சேலத்தில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் இருந்தும், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:29 PM
பகிர்:

சேலம், ஆக., 14  : சேலத்தில் இன்று காலை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் இருந்தும், ஏற்காடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் இருந்தும் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த நிர்மலா புங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது ஆதூரை அடுத்து மஞ்சினி பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், நிர்மலாவின் கழுத்தில் இருந்த  8 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

இதேப்போல, சப் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி ஆவடி பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.  ஏற்காடு எக்ஸ்பிரஸில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த போது மொரப்பூர் அருகே  ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த நந்தினியின் கழுத்தில் இருந்த 9 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஒருவர் ஓடிவிட்டார். இது குறித்து சேலம் ரயில்வே போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →