மனைவி, மகனை வெட்டிக் கொலை செய்தவர் கைது
பட்டுக்கோட்டை, ஆக.14: பட்டுக்கோட்டை அருகே மனைவி மகனை வெட்டிக் கொலைசெய்தவர் கைது செய்யப்பட்டார். பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு அருகில் சுந்தரம்-வடக்கு காலனி ஊரைச் சேர்ந்தவர
பட்டுக்கோட்டை, ஆக.14: பட்டுக்கோட்டை அருகே மனைவி மகனை வெட்டிக் கொலைசெய்தவர் கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் அருகே தம்பிக்கோட்டை வடகாடு அருகில் சுந்தரம்-வடக்கு காலனி ஊரைச் சேர்ந்தவர் ராஜா என்ற மாரிமுத்து (40) தினக்கூலி. இவர் 8 வருடங்களுக்கு முன்னால் ருக்மிணி என்ற விதவைப் பெண்ணைக் கண்டு அவரை அழைத்து வந்து அவருடன் குடும்பம் நடத்தினார். ருக்மிணிக்கு ஏற்கெனவே முதல் கணவர் மூலம் தீபா (15) பவித்ரா (12) ஐயப்பன் (11) என மூன்று குழந்தைகள் உண்டு.
மேலும் ராஜாவுக்கு ருக்மிணிக்கும் பிறந்த ஆகாஷ் (6) என்ற மகனும் உடன் உள்ளார்.
இந்நிலையில் ஒரு மாதம் முன்பு தீபாவிடம் ராஜா தகாத முறையில் நடக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் முரண்டு செய்யவே, அரிவாளால் வெட்டியுள்ளார். உடனே மருத்துவமனையில் சேர்த்து, குணமாகி தீபா பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில்
மீண்டும் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார் ராஜா. இதனைக் கண்டு அனைவரும் ராஜாவைத் துரத்தி விட்டுள்ளனர். வெளியே சென்ற ராஜா மீண்டும் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டுக்கு வந்து, அரிவாளால் அனைவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். அரிவாள் வெட்டுப்பட்ட தீபாவும் பவித்ராவும் வெட்டுக் காயத்துடன் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்திருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராஜா வெட்டியதில், அங்கே படுத்திருந்த ருக்மிணி, அவர்களின் மகன் ஆகாஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். ஐயப்பன் அருகில் இருந்த பாட்டி வீட்டில் படுத்துக் கொண்டதால் தப்பித்துள்ளான்.
ருக்மிணி, ஆகாஷ் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தபின் அந்த அரிவாளுடன் அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்த ராஜாவை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். அதன் பேரில்அதிராம்பட்டினம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.