டாஸ்மாக் விபரீதம்: தாய்-மகன் தங்களுக்குள் வெட்டிக் கொலை
திருவாரூர், ஆக.30: போதையில் தாயை வெட்டிய மகனை, பழிக்குப் பழியாக வெட்டிய தாய், மகனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்துக் கொலை செய்தார். திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே பெருந்தரக்குடி பகுதியைச்
தற்போதைய செய்திகள்டாஸ்மாக் விபரீதம்: தாய்-மகன் தங்களுக்குள் வெட்டிக் கொலை
திருவாரூர், ஆக.30: போதையில் தாயை வெட்டிய மகனை, பழிக்குப் பழியாக வெட்டிய தாய், மகனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்துக் கொலை செய்தார். திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே பெருந்தரக்குடி பகுதியைச்
திருவாரூர், ஆக.30: போதையில் தாயை வெட்டிய மகனை, பழிக்குப் பழியாக வெட்டிய தாய், மகனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்துக் கொலை செய்தார்.
திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே பெருந்தரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள்(50). இவரது கணவர் நாகமுத்து. இவர்களுடைய மகன் முகில்வண்ணன் என்கிற ராஜா (35). ராஜா மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் மீது கொலை வழக்குகள் இரண்டு, கற்பழிப்பு வழக்கு ஒன்று ஏற்கெனவே உள்ளது. இதனால் சிறை சென்ற ராஜா, திருச்சி மத்திய சிறையில் இருந்து சென்ற வாரம்தான் வெளியில் வந்தார்.
போதைக்கு அடிமையான நிலையில் தாய்க்கும் மகனுக்குமே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதுண்டாம். இந்நிலையில் ராஜா போதையில் தன் தாயை வெட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீரம்மாள், அரிவாளால் தன் மகனை வெட்டியுள்ளார். பின்னர் வெட்டுப்பட்ட நிலையில் வீட்டுக்கு வெளியில் வந்து, மகனை வீட்டுக்குள் விட்டுப் பூட்டி, குடிசைக்கு தீ வைத்தார். இதில் மகன் ராஜா எரிந்து சாம்பலானார். வீட்டை விட்டு வெளியே வெட்டுப் பட்ட நிலையில் வந்த வீரம்மாளும், ரத்தம் அதிகம் வெளியேறியதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.