முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேருக்கு நீதிமன்றக் காவல்

கடன் தொகையை திருப்பித் தராத ஆத்திரத்தில் வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்றொருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

கடன் தொகையை திருப்பித் தராத ஆத்திரத்தில் வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மற்றொருவரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவ கிராமமான கிளிஞ்சல்மேடை சேர்ந்த சகோதரர்களான அன்பழகன் (30), திருமுருகன் (27). இவ்விருவரும் அதே ஊரை சேர்ந்த செண்பகம் (35) என்பவரிடம் மீன்பிடித் தொழிலுக்காக ரூ.2 லட்சம் கடன் வாங்கியிருந்தனராம். குறித்த காலத்தில் தொகையை திருப்பிப் தராமல் சகோதரர்கள் இழுத்தடித்து வந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த செண்பகம் மற்றும் அவரது நண்பர்கள் சுகுமாறன் (28), மதி (30), செல்வமணி (32), பரமசிவம் (33) ஆகிய 5 பேரும் சேர்ந்து, கடந்த மாதம் 21-ம் தேதி இரவு அன்பழகன், திருமுருகனை வீடு புகுந்து இருவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இதில் இருவரும் காயமடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டனர். அதேவேளையில் செண்பகம் மனைவி விஜி மற்றும் ஜெகதீஸ்வரி, ஜெகநாதன் ஆகிய மூவரும் அன்பழகன் மனைவி சித்ராவை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சித்ரா, காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியதாக கூறப்படும் சுகுமாறன், செண்பகம், மதி, பரமசிவம், செல்வமணி மற்றும் அஞ்சப்பன், தங்கராசு, மூர்த்தி, ஜெகநாதன் ஆகிய 9 பேரை தேடி வந்தனர்.

இதில் செண்பகம், மதி, பரமசிவம், செல்வமணி ஆகிய நால்வரும் காரைக்கால் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். சுகுமாறன் என்பவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த 5 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தமராசா உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →