கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பி சேலத்தில் திமுகவினர் அடாவடி
சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய திமுகவினர், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டனர்.
தற்போதைய செய்திகள்கருணாநிதி உடல்நலம் குறித்து வதந்தி பரப்பி சேலத்தில் திமுகவினர் அடாவடி
சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய திமுகவினர், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டனர்.
சேலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து வதந்தி பரப்பிய திமுகவினர், பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டனர்.
சேலம் அரிசிப்பாளையம், திருச்சி சாலையில் உள்ள பிரபாத், குகை ஆகிய பகுதிகளில் கடைகளை அடைக்கச் சொல்லியும், ஆட்டோக்களை தடுத்து நிறுத்தியும், பள்ளிகளில் சென்று அவற்றை மூடக் கோரியும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய், நத்தம் காலனி பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு நீதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் கடந்த வாரம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நத்தம் காலனியைச் சேர்ந்த அன்பு - ருக்கு தம்பதியரின் மகள் மங்கம்மாள் (20) என்பவரும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தின் 2-வது நாளான கடந்த வியாழக்கிழமை மயக்கமடைந்து தருமபுரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் திங்கள்கிழமை (டிசம்பர் 3) மங்கம்மாள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மங்கம்மாளின் உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து சடலத்தைப் பெற்றுச் செல்லும்படி மருத்துவர்கள் மங்கம்மாளின் உறவினர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை நடத்திய பிறகே சடலத்தைப் பெற முடியும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பிரேத பரிசோதனைக் கூடத்தின் எதிரில் ஏராளமான தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் திரண்டனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தலைமையில் சுமார் 100 போலீஸார் மூலம் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றும், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், அம்பேத்கர் மக்கள் இயக்கம், விடியல் பெண்கள் மையம் உள்ளிட்ட 34 அமைப்புகளின் நிர்வாகிகளும், மங்கம்மாளின் பெற்றோர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், போலீஸார் முழுவதும் அதனைக் கையாளவதற்கே அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதனால், போலீஸார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத்தகையை சூழ்நிலையில், கருணாநிதி உடல் நலக் குறித்த வதந்தியும் சேர்ந்து கொண்டதால், சேலம் மாநகரம் தற்போது சட்டம் ஒழுங்குப் பிடியில் தத்தளிக்கிறது.