முகப்பு
தற்போதைய செய்திகள்

குடித்துவிட்டு தகராறு செய்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மகன்

மதுரை அவனியாபுரத்தில் குடிபோதையில் அடிக்கடி தனது தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார் அவருடைய மகன்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:48 PM
பகிர்:

மதுரை அவனியாபுரத்தில் குடிபோதையில் அடிக்கடி தனது தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தார் அவருடைய மகன்.

மதுரை அவனியாபுரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 44). இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்தாராம். இவர்களின் மகன் செல்வக்குமார் (வயது 20) இதனைக் கண்டு மிகவும் மனம் வருந்தியுள்ளார். தந்தையின் துன்புறுத்தல் அதிகரிக்கவே, நேற்று இரவு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பையாவின் தலையில் அருகில் இருந்த சிமிண்ட் சிலாப் கட்டையை எடுத்துப் போட்டு, அவரைக் கொலை செய்தார். பின்னர் செல்வக்குமார் அவனியாபுரம் போலீஸில் சரணடைந்தார். அவனியாபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.