நடத்தையில் சந்தேகம்: உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் போலீஸில் சரண்
மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரி என்ற இடத்தில் உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் பின்னர் போலீஸில் சரண் அடைந்தார்.
மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரி என்ற இடத்தில் உடன் இருந்த பெண்மணியைக் கொன்றவர் பின்னர் போலீஸில் சரண் அடைந்தார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ளது குட்டிமீட்டிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(40). இவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் ஆகி, கணவர்களை விட்டுப் பிரிந்து வந்துவிட்டார்.
இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அருகே தோடநேரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (55) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராமகிருஷ்ணனும் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து, மனைவியை விட்டுப் பிரிந்து வந்துவிட்டாராம்.
இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் சிந்தாமணி அருகே ஐயனார்புரத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சுப்புலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், நேற்று இரவு அவரைக் கத்தியால் கொன்றுவிட்டு, அவனியாபுரம் போலீஸில் சரண் அடைந்தார் ராமகிருஷ்ணன். இதுகுறித்து அவனியாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.