முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. அருகே லாரி கவிழ்ந்து 15 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. அருகே லாரி கவிழ்ந்து 15 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 15 பேர் காயம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு-கோட்டையூர் சாலையில் செங்கல் சூளை வேலைக்கு ஆட்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை மேலக்கோபாலபுரம், ஆர்.சி.தெருவைச் சேர்ந்த சோமன் மகன் பிரபாகரன் (25) என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரியை டிரைவர் அஜாக்கிரதையாயும், அதிவேகமாயும் ஓட்டி வந்தாராம். இதனால் மகேந்திரன் பால்பண்ணை அருகே லாரி வந்த போது பின் பக்க டயர் வெடித்து கவிழ்ந்துள்ளது.
இதில் தமிழரசி (42), வளன்அரசு (எ) விஜயராஜ் (29), பேச்சி (30), ஜெயலட்சுமி (40), செல்வி (35), சூசையம்மாள்(27), லிங்கம்மாள் (40), தாமரை (24), அன்னபுஷ்பம் (40), தெய்வானை (32), வனப்பேச்சி (35), ராம்கி (48), வேளாங்கண்ணி (32), பாக்கியம் (52), சவரியம்மாளஅ (35) ஆகியோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து மேலக்கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராஜ் (33) என்பவர் வ்த்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழ்ககுப் பதிவு செய்து ராஜை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →