முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்களைக் காட்டி லாரியை வழிமறித்து ரூ.22 ஆயிரம் கொள்ளை

கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு மணல் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி...

Updated On : 12 டிசம்பர், 2012 at 7:58 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:22 AM

கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு மணல் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த லாரி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டம்புதூர் என்ற இடத்துக்கு இன்று அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், சாலையோரம் பெண்களைக் காட்டி, கவர்ந்து, லாரியை வழிமறித்து, லாரி டிரைவரை மிரட்டி, டிரைவர் மற்றும் கிளீனர் வைத்திருந்த ரூ.22 ஆயிரம் பணம், 2 செல்போன்களைப் பறித்துச் சென்றது. இது குறித்து லாரி டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளக்கரை போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.