ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹெல்மட் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹெல்மட் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி நாச்சியார் (70). இவர் வியாழக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் கைகாட்டி கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்து வந்த நபர் நாச்சியாரை ஒட்டி மோட்டார் சைக்கிளில் வந்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏ.மகேந்திரபாண்டியன் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றார்.