முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Updated On : 17 டிசம்பர், 2012 at 10:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:26 AM

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கிரில் கேட்டை உடைத்த கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து பணம், நகை இருந்த இரும்பு பெட்டியை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், இரும்புப் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் பெட்டியில் இருந்த 4.50 கோடி பதிப்புள்ள நகை மற்றும் பணம் தப்பியது. இது குறித்து வங்கியின் செயலாளர் ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் மோப்ப நாயுடன் வந்து கொள்ளை முயற்சி நடந்த வங்கியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.