குஜராத்தில் தேர்தல் வெற்றி : காரைக்காலில் பாஜகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையொட்டி காரைக்கால் மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையொட்டி காரைக்கால் மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குஜராத், இமாச்சல் மாநில சட்ட்பேரவைத் தேர்தலில் குஜராத் மாநில வெற்றி பாஜகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
புதுவை மாநில பாஜக வர்த்தகர் அணித் தலைவர் எம்.அருள்முருகன் தலைமையில் மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதுகுறித்து எம்.அருள்முருகன் கூறும்போது, பாஜக குஜராத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திரமோடி குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கூறிய குற்றச்சாட்டுகளை மக்கள் தவிடுபொடியாக்கிவிட்டனர். மோடியின் மூலம் மாநிலம் சிறந்த வளர்ச்சியுறுமென அம்மாநில மக்கள் நம்புகின்றனர். குஜராத் தேர்தல் வெற்றி வரவுள்ள பாராளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை காங்கிரஸூக்கு ஏற்படுத்துமென்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார் அவர்.
பாஜகவை சேர்ந்த மற்றொரு அணியினர் முன்னாள் மாவட்டத் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் பேரந்து நிலையம், மதகடிப் பகுதியில் பகுதியில் பட்டாசு வெடித்து, இனி்ப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர். நிகழ்ச்சியில் கட்சியை சேர்ந்த துரைசேனாதிபதி, முத்துசாமி, அய்யம்பெருமாள், கஸ்தூரிரங்கன், கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.