முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் புறவழிச்சாலையில் பால் லாரி மோதி 7 வயது சிறுமி சாவு

சிதம்பரம் புறவழிச்சாலையில் தாயுடன்சாலையை கடந்த போது பால்லாரி மோதிய விபத்தில் ....

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

சிதம்பரம் புறவழிச்சாலையில் தாயுடன்சாலையை கடந்த போது பால்லாரி மோதிய விபத்தில் புதன்கிழமை நள்ளிரவு திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி இறந்தார்.

திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த பழனி. இவரது மனைவி லோகநாயகி தனது மகள் நந்திதாவுடன் (வயது.7) சுற்றுலா பேருந்தில் மேல்மருவத்தூர் சென்று திரும்பியுள்ளார். சிதம்பரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு வண்டிகேட் அருகே டயருக்கு காற்று அடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போது லோகநாயகி தனது மகள் நந்திதா இயற்கை உபாதை செல்வதற்காக, அவரை அழைத்துச் கொண்டு சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த தனியாருக்கு சொந்தமான பால் லாரி சிறுமி நந்திதா மீது மோதியது. இதில் நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சேலம் மாவட்டம் ஆரக்கனூரைச் சேர்ந்த லாரி டிரைவர் சின்னையனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.