மதுரை திருமங்கலம் அருகே பஸ்-வேன் மோதல்: 5 பேர் பலி
திருப்பரங்குன்றம், பிப்.20: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சம்பக்குளம் - கருவேலம்பட்டி விலக்கில் பஸ்ஸும் ஆம்னி வேனும் மோதியதில் 5 பேர் பலியாயினர். மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற தனிய
திருப்பரங்குன்றம், பிப்.20: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சம்பக்குளம் - கருவேலம்பட்டி விலக்கில் பஸ்ஸும் ஆம்னி வேனும் மோதியதில் 5 பேர் பலியாயினர்.
மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆம்னி வேனும் கருவேலம்பட்டி ரிங்ரோடு அருகே இன்று காலை நேரத்தில் நேருக்கு நேராக மோதின. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மதுரை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.