ஒரகடம் அருகே மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலி
ஸ்ரீபெரும்புதூர், ஜன 12: ஒரகடம் அருகே அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலியாகின. ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கறவை மாடுகள் வளர்த்து வ
ஸ்ரீபெரும்புதூர், ஜன 12: ஒரகடம் அருகே அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த 7 மாடுகள் பலியாகின.
ஒரகடம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கறவை மாடுகள் வளர்த்து வருகிறார். முனுசாமி தனது மாடுகளை புதன்கிழமை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். மாடுகள் வியாழக்கிழமை இன்று மாலை வரை வீடு திரும்பாததால், ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வல்லம் பகுதியில் மாடுகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது மாத்தூர் பகுதியில் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் சாலைக்கு அருகில் இருந்து உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இந்த மின்கம்பியை மிதித்த முனுசாமியின் 7 மாடுகளும் பரிதாபமாக இறந்துள்ளன.
முனுசாமி இதுகுறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஒரகடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.