பொங்கல் தினத்தில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
புதுச்சேரி, ஜன.16: புதுச்சேரியில் பொங்கல் தினத்தில் இரு வெவ்வேறு இடங்களில் சூதாடிய 14 பேரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒ
புதுச்சேரி, ஜன.16: புதுச்சேரியில் பொங்கல் தினத்தில் இரு வெவ்வேறு இடங்களில் சூதாடிய 14 பேரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக உருளையன்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸôர், அங்கு பணத்தை வைத்து சூதாடிய அரியாங்குப்பம் ஜான் வின்சென்ட் (55), கோரிமேடு நாகராஜ் (50), சண்முகாபுரம் சுப்பிரமணி (63), உருளையன்பேட்டை முத்துசாமி (42), மனோகர் (50), வேலன் (38), கருணாகரன் (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் முருகேசனும் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் குருசுகுப்பம் மரவாடி வீதி சுனாமி குடியிருப்பில் பணம் வைத்து சூதாடிய சரவணன் (21), கணபதி (21), சுமன் என்ற மதுரைவீரன் (21), வெற்றிமுருகன் (20), மகேஷ் (20), தமிழ் (19) ஆகியோரை முத்தியால்பேட்டை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1100-ஐ பறிமுதல் செய்தனர்.