முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கோவில் வேலை என ஆசை காட்டி குருக்களிடம் மோசடி: 3 பேர் கைது

புதுச்சேரி, ஜன. 23: அமெரிக்காவில் பூசாரி மற்றும் தவில் வித்துவான் வேலை இருப்பதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள குருக்கள் மற்றும் தவில் வித்துவான்களிடம் ரூ.1.60 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீஸôர் திங்கள்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:

புதுச்சேரி, ஜன. 23: அமெரிக்காவில் பூசாரி மற்றும் தவில் வித்துவான் வேலை இருப்பதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள குருக்கள் மற்றும் தவில் வித்துவான்களிடம் ரூ.1.60 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரைச் சேர்ந்தவர் பாலகுருக்கள். இவர் புதிய பஸ் நிலையம் அருகில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இது குறித்த இணையதளமும் வைத்துள்ளார்.

அதில் கிடைத்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர், தான் காரைக்குடியைச் சேர்ந்த அஜித்குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு பூசாரி மற்றம் தவில் வித்துவான்கள் தேவை என்றும், பூசாரிக்கு ரூ.1 லட்சமும், தவில் வித்துவான்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா செலவுகளுக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய பாலகுருக்கள், தனக்குத் தெரிந்த தவில் வித்துவான்கள் 4 பேரிடமிருந்து பணம் வசூலித்து, தனது பணத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.1.60 லட்சத்தை அஜித்குமாரிடம் கடந்த ஆண்டு கொடுத்துள்ளனர்.

சில தினங்களுக்கு பிறகு அஜித்குமாரை தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப் பட்டோம் என்பதை  பாலகுருக்கள் உணர்ந்தார். இது குறித்து தனது உறவினர் மொரட்டாண்டியைச் சேர்ந்த சீத்தாராம குருக்களிடம் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு சீத்தாராம குருக்களுக்கும் அஜித்குமாரிடம் இருந்து போன் வந்தது. வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அஜித்குமார் கூறியதும் உஷாரடைந்த சீத்தாராமன், இதுகுறித்து புதுச்சேரியில் இருக்கும் பாலகுருக்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இருவரும், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வி.ஜெ.சந்திரனிடம் புகார் அளித்தனர். அவரின் வழிகாட்டுதலின் பேரில் உருளையன்பேட்டை போலீசார், மோசடி பேர்வழிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

போலீசாரின் அறிவுரைபடி, பணத்தை மொரட்டாண்டி வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சீத்தாராம் குருக்கள் அஜித்குமாரிடம் தெரிவித்தார். பணத்தை பெற மொரட்டாண்டி வந்த காரைக்குடியைச் சேர்ந்த அஜித்குமார், அருணாச்சலம், அரக்கோணம் ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.