முகப்பு
தற்போதைய செய்திகள்

தீடிரென்று பிரேக் போட்ட லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து

கும்மிடிப்பூண்டி, ஜூலை.14: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் சனிக்கிழமை பெரியபாளையம் சென்னை நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீர் பிரேக் போட்டதன் காரணமா

Updated On : 19 செப்டம்பர், 2012 at 10:53 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி, ஜூலை.14: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் சனிக்கிழமை பெரியபாளையம் சென்னை நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீர் பிரேக் போட்டதன் காரணமாக லாரியின்  பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் - சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் அருகே பனப்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் போட்டு ஒருவர் நெடுஞ்சாலைக்கு திரும்பினார். அப்போது ஆந்திராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

இந்த லாரியின் டிரைவர் பைக்கின் மீது மோதாமல் இருக்க தீடிரென பிரேக் போட்ட நிலையில் லாரியின் பின்னால் ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ் லாரியின் பின்பக்கம் மோதியது.

Advertisement

இந்த விபத்தில் அரசு பஸ்ஸின் முன் பகுதி நொறுங்கியது. விபத்தில் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி(30), காசிரெட்டி பேட்டையை சேர்ந்த குப்பன்(40) பலத்த காயமடைந்தனர்.

சம்பவம் குறித்த அறிந்து விரைந்த பெரியபாளையம் போலீஸார் 108 ஆம்புலன்சை வரவழைத்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.