முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மகளிர் காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோட்டம்

சேலம், ஜூலை 16 : சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பெண்கள் நேற்று நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சேலம் அரசு மகளிர் காப்பகததில், இளம் வயது திருமணத்

தற்போதைய செய்திகள்

அரசு மகளிர் காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் தப்பியோட்டம்

சேலம், ஜூலை 16 : சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பெண்கள் நேற்று நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சேலம் அரசு மகளிர் காப்பகததில், இளம் வயது திருமணத்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சேலம், ஜூலை 16 : சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பெண்கள் நேற்று நள்ளிரவு காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சேலம் அரசு மகளிர் காப்பகததில், இளம் வயது திருமணத்தை நிறுத்தி மீட்கப்படும் பெண்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விபச்சார வழக்கில் கைதாகும் பெண்கள் தங்கவைக்கப்படுவர்.

அந்த வகையில், கொல்கட்டாவைச் சேர்ந்த பிங்கி என்ற பெண்மணி கடந்த மே மாதம் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தார். அதேப்போல, 2008 ஆம் பங்களாதேஷ் சேர்ந்த இளம் பெண்கள் பியா, சபீனா, ரேஷ்மா ஆகியோர் உரிய பாஸ்போர்ட், விசா இல்லாமல் பிடிபட்டு இங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு காப்பகத்தின் சாவியை எடுத்து மறைத்து வைத்து கொண்ட இந்த நால்வரும், காப்பக கண்காணிப்பாளர் மல்லிகா, வார்டன் சாந்தா ஆகியோர் உறங்கிய பிறகு கதவை திறந்து, வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு காப்பகத்தில் இருந்து தப்பித்து விட்டனர்.

தப்பிச் சென்றவர்களில் மூவர் வெளிநாட்டுப் பெண்கள் என்பதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆணையர் கே.சி. மகாலி நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தப்பிச் சென்ற பெண்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →