முகப்பு
தற்போதைய செய்திகள்

சமையல் செய்யும் போது தீ பற்றி பெண் பலி

கும்மிடிப்பூண்டி,ஜூன்.6: கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த தேவி(25) என்பவர் வீட்டில் சமையல் செய்யும் போது சேலையில் தீ பற்றி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:35 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி,ஜூன்.6: கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த தேவி(25) என்பவர் வீட்டில் சமையல் செய்யும் போது சேலையில் தீ பற்றி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு காலனி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மனைவி தேவி. இவர்களுக்கு  06-06-2007 அன்று திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு விக்னேஷ்(4), விஷ்வா(2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31-05-2012 அன்று மாலை தேவி அவரது வீóட்டில் கேஸ் அடுப்பில் சமையல் செய்யும் போது தீ தேவியின் சேலையில் பற்றி உடலெல்லாம் தீ பரவியது. தேவியின் அலறல் கேட்டு அவரது கணவர் தேவராஜ் தேவியை காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

Advertisement

தொடர்ந்து இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவராஜ் உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி தேவி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பலியானார்.

சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.